வருகிற 31. 08.2022ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி பேசுகையில் - விநாயகர் சிலை வைப்பவர்கள் காவல்துறையினரால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும், அனுமதி பெற்ற பிறகு சிலை அமைக்க வேண்டும், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், சிலைகளுக்கு ஓலைகளால் ஆன மேற்கூரை அமைக்க கூடாது, மின்சாரம் பயன்படுத்துவதற்கு மின் துறையினரால் முறையாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணியினர், பா.ஜ.க. மற்றும் விழா குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூரில் விநாயகர் சதுர்த்தி குறித்து ஆலோசனை கூட்டம்...
August 18, 2022
0
Tags