மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டார்.
August 23, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.என். பாளையம் ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க, வருகின்ற வியாழக்கிழமை அன்று வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாதுகாப்பு பணிகளை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், டி.என். பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் கே.கே. செல்வன் மற்றும் தி.மு.க. கழக நிர்வாகிகள் பேரூர் கழகச் செயலாளர்கள், திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.