கோபி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமையில் ஒத்தக்குதிரையில் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம்.
August 23, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் அவர்கள் அறிவுறுத்தலின்படி கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் அவர்கள் தலைமையில் ஒத்தக்குதிரை முத்துலட்சுமி திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு வருவதையொட்டி கோபி வடக்கு ஒன்றியத்தின் சார்பாக வரவேற்பளிப்பது பற்றியும், புதிதாக கோபி வடக்கு ஒன்றியத்தில் பொறுப்பேற்று கொண்டிருக்கும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சிி , பேரூராட்சி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கழக சார்பு அமைப்புகள் சார்ந்த அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
Tags