Type Here to Get Search Results !

அகத்தியர் சிலம்பாட்ட கலைச் சங்க மாணவிகள் சர்வதேச அளவிலான போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர். மாணவிகளை டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மனமார பாராட்டினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவாரங்காடு பகுதியை சார்ந்த அகத்தியர் சிலம்பாட்டம் கலை சங்கம் சார்பில் நேபால்,கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதல் இரண்டு பரிசுகளை பெற்ற மாணவிகளுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.   நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவாரங்காடு பகுதியில் அகத்தியர் சிலம்பாட்ட கலைச் சங்கம் சார்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான முறையில் சுருள் வாள், சிலம்பாட்டம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
இங்கு பயிலும் மாணவ மாணவிகள் 
 கடந்த 18, 19ம்  தேதியில் நேபால்,  கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பிருந்தா, கௌசல்யா ஆகியோர் 11 முதல் 14 வரை வயதுள்ள தனித்திறமை போட்டியில் கலந்துகொண்டு முதல் 2 பதக்கங்களை கைப்பற்றினார். அதன்பின் ஈரோடு ரயில் ரயில் நிலையத்துக்கு வந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களை வென்ற மாணவிகள் ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அவர்களை நேரில் சந்தித்தனர். தாங்கள் பெற்ற கோப்பை மற்றும் தங்கப்பதக்கத்தை அவரிடம் காட்டி வாழ்த்து பெற்றனர். பதக்கம் வென்ற மாணவிகளை டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அவர்கள் மனமார பாராட்டினார். அதே நாளில் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மாணவிகள் அவருடைய அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் மாணவிகள் தங்கள் சொந்த ஊரான பள்ளிபாளையத்திற்கு வந்தடைந்தனர். அங்கு மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான பள்ளிபாளையம் பகுதியில் தாரை தப்பட்டையுடன்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காவல் நிலைத்தில் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் செல்வம் மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாகப்படுத்தினார். இதில் அகத்தியர் சிலம்பாட்ட கலைச்சங்க ஆசான் விஜய் பாபு மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.