கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
August 27, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி சார்பாக "எனது குப்பை - எனது பொருப்பு" தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், கார்த்தி, சௌந்தர்ராஜன், திமுக கவுன்சிலர் விஜய கருப்புசாமி, திமுக வார்டு செயலாளர் செந்தில்குமார், திமுக கவுன்சிலர் மூர்த்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள், மருத்துவ அலுவலர் மோகன் குமார், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.