ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அருகே கல்லம்பாறையில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று, கடையில் சோதனை நடத்தினர். சோதனையில், புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் சதீஸ்வரன் (34) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சிலம்பு முருகேசன் என்பவரிடம் இருந்து விற்பனைக்கு வாங்கி வந்த 300 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 414 புகையிலை பாக்கெட்டுகள் என மொத்தம் ரூ.8,904 மதிப்புள்ள 714 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.