ஆப்பக்கூடல், கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் வீடு திரும்பவில்லை - வழியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
August 17, 2022
0
ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர், அண்ணா நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சாந்தி (52). இவர் கடந்த 15 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அங்குள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற சாந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேடிய போது கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் சாந்தி சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags