Type Here to Get Search Results !

வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதியை உயர்த்தி தருமாறு கோரிக்கையை வலியுறுத்தி மனு ...

தமிழ்நாடு அட்வகேட் கிளர்க்'ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பாக ஈரோடு வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களின் நல சங்கத்தின் தலைவர் கா.பா. ஆறுமுகம் அவர்கள் ஈரோடு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதியை உயர்த்தி தருமாறு கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் "தமிழக வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கிய முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சேமநல நிதியாக வக்கீல் குமாஸ்தா குடும்பங்களுக்கு முதன் முதலில் தலா யூ.50,000/- வழங்கி வக்கீல் குமாஸ்தா குடும்பங்களுக்கு ஒளி ஏற்றினார். தற்போது சேமநலநிதி 02.02.2021ல் இருந்து 4,00,000/- உயர்த்தப்பட்டிருக்கிறது. உலகெங்கும் 15.03.2020ல் இருந்து ஆகஸ்ட் 2021 வரை கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு நீதிமன்றங்கள் சரியாக செயல்பட முடியாத சூழ்நிலையில் முத்திரை விற்பனையும் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் சேம நலநிதி சரியாக வழங்க முடியாமல் போய்விட்டது. அதனால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அட்வகேட் கிளர்க்ஸ் அசோசியேஷனுக்கும் சென்னை பார் கவுன்சிலுக்கும் நிதி ஒதுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இது பற்றி ஏற்கனவே தமிழ்நாடு அட்வகேட் கிளர்க்ஸ் அசோசியேசன் சங்கத்தின் சார்பாக 09.04.2022-ம் தேதியில் அனுப்பிய கடிதம் தமிழக அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது என்று பதில் வந்துள்ளது. தமிழக வழக்கறிஞர்களின் சேமநல நிதி தற்போது ரூபாய் பத்து லட்சம் வழங்கிய தங்களின் அன்பான மனம் அதேபோல் தமிழக வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களுக்கு சேமநல நிதியை 4 லட்சத்தில் இருந்து 7 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமாய் இந்த கோரிக்கை மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கிறோம். கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு தமிழ்நாடு அட்வகேட்ஸ் கிளர்க்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பாகவும் ஈரோடு வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களின் நலச் சங்கத்தின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.