ஈரோடு, பெரியார் மன்றத்தில் HUMOUR CLUB OF ERODE சார்பாக 220 - வது சிறப்பு கூட்டம் 28/08/2022 இன்று நடைபெற்றது. இதில் "திரையிசை வாழ்க்கைக்குத் தீர்வு தருமா?" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் "நடிப்பிசைப் புலவர்" உயர்திரு.குடியேற்றம்.சீனி.சம்பத் எம்.ஏ., அவர்கள் இசையுறை நிகழ்த்தினார்.
உயர்திரு.தபேலா.S. கார்த்திக் (அம்மூர்) அவர்கள் பின்னணி இசையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு பைனான்சியர்ஸ் அசோசியேஷன் தலைவரும் தி ஈரோடு டென்னிஸ் கிளப் தலைவருமான உயர்திரு. C. முத்துசாமி அவர்கள் மற்றும் ஈரோடு பைனான்சியர்ஸ் வெல்ஃபேர் டிரஸ்டின் துணைத் தலைவரும் தி ஈரோடு டென்னிஸ் கிளப்பின் செயலாளருமான உயர்திரு. R. வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறந்த முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை
HUMOUR CLUB OF ERODE ன் தலைவர் Dr. V. B. ராஜவேல், துணைத் தலைவர் R. பாலமுருகன் (Advocate), செயலாளர் M. துறை, இணை செயலாளர்கள் M. சக்திநல்லசிவம், K. செந்தில்குமார், N. பாண்டுரங்கன் ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்தினர்.