ஜி கிஷன் ரெட்டி அவர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்காக ஈரோடு வருகை ...
August 19, 2022
0
ஈரோடு பாராளுமன்ற தேர்தலின் மேலிட பொறுப்பாளரும் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமான திரு. ஜி கிஷன் ரெட்டி அவர்கள் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமான சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்காக ஈரோடு மாநகருக்கு இன்று 19.08.2022 வெள்ளிக்கிழமை வருகை புரிந்தார். ஜி கிஷன் ரெட்டி அவர்களை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.