ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், சேவ் சைட் பவுண்டேஷன், ஈரோடு கிழக்கு அரிமா சங்கம், ஈரோடு விஷால் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் துவங்கப்பட்டது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி. சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார்.
நடைபெற்ற முகாமில் கண்ணில் புரை, மாறுகன், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், கிட்ட பார்வை, தூர பார்வை ஆகியவற்றிற்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும்.