கோபிசெட்டிபாளையம் நகராட்சி பூங்காவில் பல்வேறு சங்கங்கள் பங்கேற்ற சிறப்பு தூய்மை பணி முகாம் ...
September 10, 2022
0
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பூங்காவில் பல்வேறு சங்கங்கள் பங்கேற்ற சிறப்பு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் அவர்கள் தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டு தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து வணிகர் சங்க தலைவர் வேலுமணி, ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் சரவணன், முன்னால் தலைவர் கார்த்திகேயன், கோபி உழவன் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், ஜேசிஐ சங்க தலைவர் சபீர், ஒய்ஸ்மென் சங்க பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர் சரோஜா, கோபி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணிகளையும், பேருந்து நிலையத்திலும் தூய்மை பணிகளையும் மேற்கொண்டனர். நகராட்சி சுகாதார அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன், செல்வகுமார், விஜயன், பழனிச்சாமி, பூங்கொடி தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அருள் பிரசாத், சத்யா, மஞ்சுநாதன், அருள், காளியம்மாள், வைஷ்ணவி மற்றும் பலர் பங்கேற்றனர்.