Type Here to Get Search Results !

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே  தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 
மாவட்ட தலைவர் அஸ்வத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோட்டசெயலாளர் சபரிநாதன், தலைவர் கஸ்துாரி ரங்கன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, காவிரி ஆற்றங்கரையில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில் ஆகம விதி நடைமுறைப்படி கும்பாபிேஷக பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், விரைவில் கும்பாபிஷேக தேதியை அறிவிக்க வேண்டும் என்றும்,  அறநிலைத் துறையை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

அதன் பின்பு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கோட்டச் செயலாளர் சபரிநாதன் பேட்டியளித்தார்.  பேட்டியில் அவர் கூறியதாவது- 

ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர் கோயிலுக்கு உடனடியாக கும்பாபிஷேக தேதி அறிவிக்க வேண்டும். கோயிலில் தனி நபர் சமுதாயத்தின் பெயரில் கல்வெட்டு அமைத்துள்ளார்கள். இது சம்பந்தமாக வருவாய்த்துறை அறநிலைய துறைக்கு மனு அளித்தும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்த திருக்கோயில் அனைத்து சமுதாய மக்களுக்கும் உள்ள திருக்கோயில் எனவும் இது மிகவும் பழமையான கோயில் இதனுடைய வரலாறு மறைக்கப்பட்டு தனி நபர்களுக்கு இந்த கோயில் உரிமையை கொடுக்க அறநிலையத்துறை முயற்சி செய்வதாகவும் அதை தவிர்த்து உடனடியாக கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்படி தவறும் பட்சத்தில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் சார்பில் மாநிலத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் மற்றும் தலைமை செயலகத்திற்க்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் கூறியுள்ளார்.. ✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.