சேலத்தில் இருந்து சங்ககிரி, வெப்படை வழியாக நேற்று இரவு 8-30 மணி அளவில் பள்ளிபாளையம் வந்திருந்த வி.கே.சசிகலாவிற்கு தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவையின் மாநில செயலாளர் G.ஆறுமுகம் தலைமையில் பள்ளிபாளையத்தில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வி.கே.சசிகலா வேனில் இருந்தபடியே பேசினார்.
திமுக ஆட்சிக்கு வந்து எந்த நல்ல திட்டங்களையும் மக்களுக்கு செய்யவில்லை. இதை செய்தேன் அதை செய்வேன் என்று மேடைக்கு மேடை வசனம் பேசியும் வருகிறார்கள். மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று அடையவில்லை அவர்கள் ஆட்சியில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு போன்றவற்றை தான் தர முடிந்தது. மேலும் தினசரி தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளும் போதைப்பொருள் விற்பனை திருட்டு போன்றவை அதிகம் நடப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளனர். அதை மக்கள் மறக்க மாட்டார்கள். தி.மு.க.வினர் அதிமுகவை அளிக்க சூழ்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்று உறுதியாக கூறுகிறேன். மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பது தான் நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் விரைவில் நம்முடைய ஆட்சி அமையப்போவது உறுதி. நான் உங்களோடு இருக்கிறேன், உங்கள் குடும்பத்தோடு ஒருவராக இருக்கிறேன். பிரிந்து சென்றவர்கள் தாய் உள்ளத்தோடு மீண்டும் வந்து இந்த இயக்கத்துக்காக பாடுபட்ட அனைவரையும் ஒன்றிணைந்து வலிமையான பேரியக்கமாக மாற்றுவதே எனது ஒரே குறிக்கோள். அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்றைக்கு நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை தள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மனித இனம் உள்ளவரை எவரும் மறக்க மாட்டார்கள். கழகத் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன்.
என கூறியுள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோபால் மற்றும் சசிகலா தமிழ்நாடு புரட்சித்தாய் சின்னம்மா பேரவை மற்றும் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
✍️செய்தியாளர் சுந்தரம்