பள்ளிபாளையம் கோட்டக்காடு பகுதியில் நுண் உர மையம் பூமி பூஜை நடைபெற்றது.
September 14, 2022
0
பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கோட்டக்காடு பகுதியில் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டிலான SBM 2.0 திட்டம் 2022-23. புதிய TPD 3 கொள்ளளவு நுண் உர மையம் பூமி பூஜை நடைபெற்றது. 15வது வார்டு ஓம் சக்தி கோவில் அருகில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய நிதியில் மீதமுள்ள நிதி வழங்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நகர மன்ற தலைவர் மோ. செல்வராஜ், துணைத் தலைவர் ப. பாலமுருகன், திமுக நகர செயலாளர் அ. குமார், திமுக நகர அவைத் தலைவர் ஜான்பாய், வெங்கடாசலம், ஜிம் செல்வம், நகராட்சி ஆணையாளர் கோபிநாத், சுகாதாரத்துறை ஆய்வாளர் பன்னீர்செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள் குரு (எ) சசிகுமார், சிவம், யுவராஜ் மற்றும் மங்கலம் சுந்தர் ஆகியோர், வார்டு செயலாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். . -செய்தியாளர் சுந்தரம்.
Tags