Type Here to Get Search Results !

ஈரோட்டில் நந்தா தொழில் நுட்பக்‌ கல்லூரியில்‌ 11 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உலகின்‌ மென்பொருள்‌ துறையின்‌ முண்ணனி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின்‌ மனித வள மேம்பாட்டு துறையின்‌ முதன்மை வளாக தோ்வாளர்‌ கலந்துக்‌ கொண்டார்.

நந்தா தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 11 வது பட்டமளிப்பு விழா 01.10.2022  இன்று நடைபெற்றது. இந்த 11 வது பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்‌ தலைவர்‌ திரு. வி. சண்முகன்‌ அவர்கள்‌ தலைமையேற்று, உரையாற்றும் போது,  உயர்தரக்‌ கல்வியினை மாணவர்கள்‌ அனைவருக்கும்‌ கற்பிப்பதன்‌ நோக்கில்‌ இக்கல்லூரியானது NAAC-ல் ‘A’ grade  தரச்சான்றிதழைப்‌ பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்‌. இந்த குறுகிய காலத்தில்‌ நந்தா தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியானது கல்வியில்‌ பல சாதனைகளைப்‌ படைத்துள்ளது. எங்கள்‌ பொறியியல்‌ பட்டதாரிகளின்‌ வேலைவாய்ப்பை நந்தா வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறை கணிசமாக அதிகரித்துள்ளனர்‌. மேலும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ 85 சதவிகித மாணவர்கள்‌ உலகளவில்‌ செயல்பட்டு வரும்‌ ; Tech Mahindra, IBM, Capgemini, iNautix, L&T Infotech, CTS, GoDB, Vernalis, EP Tech, Claysys, Infosys, NS Instruments, போன்ற பல தேசிய மற்றும்‌ சர்வதேச மென்பொருள்‌ மற்றும்‌ வன்பொருள்‌ நிறுவனங்களில்‌ எங்கள்‌ மாணவர்கள்‌ இடம்‌ பெற்றுள்ளனர்‌. 
 இங்கு பட்டம்‌ பெறும்‌ மாணவர்களும்‌ அவர்தம்‌ பெற்றோர்களும்‌ தங்களது வாழ்க்கையில்‌ சீரோடும்‌ சிறப்போடும்‌ வாழ எனது வாழ்த்துகள்‌ என்று கூரி தனது உரையினை நிறைவு செய்தார்‌. நந்தா தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ நந்தகோபால்‌ அவர்கள்‌ நடப்புக்‌ கல்வியாண்டில்‌ அனைத்து துறைகளிலும்‌ அடைந்த முன்னேற்றங்கள்‌, அதில்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்களின்‌ பங்குகள்‌ கொண்ட ஆண்டறிக்கையினை வெளியீடு செய்து பேசினார்‌. இதனைத்‌ தொடர்ந்து உலகின்‌ மென்பொருள்‌ துறையின்‌ முண்ணனி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின்‌ மனித வள மேம்பாட்டு துறையின்‌ முதன்மை வளாக தோ்வாளர்‌ முனைவர்‌ லவணம்‌ அம்பெல்லா அவர்கள்‌ சிறப்பு விருந்தினராக கலந்துக்‌ கொண்டு கடந்த கல்வியாண்டில்‌ இளங்கலைப்‌ பிரிவில்‌ கட்டிடவியல்‌ துறையில்‌ 130 மாணவர்கள்‌, கணினி மற்றும்‌ அறிவியல்‌ துறையில்‌ 173 மாணவர்கள்‌, மின்னியல்‌ மற்றும்‌ மின்னணு துறையில்‌ 120 மாணவர்கள்‌, மின்னணு மற்றும்‌ தொடர்பியல்‌ துறையில்‌ 152 மாணவர்கள்‌, இயந்திரவியல்‌ துறையில்‌ 227 மாணவர்கள்‌, தகவல்‌ தொழிநுட்ப துறையில்‌ 75 மாணவர்கள்‌ மற்றும்‌ இவர்களுடன்‌ முதுகலை பிரிவில்‌ மேலாண்மைத்துறையில்‌ 56 மாணவர்கள்‌, கணினி மற்றும்‌ அறிவியல்‌ துறையில்‌ 4 ஆகமொத்தம்‌ 937 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்‌. அவர்தம்‌ உரையில்‌ பட்டதாரிகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ கொரோனோ காலத்திலும்‌ தனது திறமையின்‌ மூலமாக முன்னேறிய சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்‌. பொறியியல்‌ பட்டதாரிகளுக்கு விடாமுயற்சியும்‌, குறிக்கோளும்‌ அவசியமானவை என்றும்‌, அனைவரின்‌ சிறந்த எதிர்காலத்திற்காக தனது வாழ்த்துக்களையும்‌, பாராட்டுக்களையும்‌ தெரிவித்தார்‌. மேலும்‌ பெற்றோர்களையும்‌ பாராட்டி நன்றி கூறினார்‌. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்‌ செயலர்‌ திரு எஸ்‌. நந்தகுமார்‌ பிரதீப்‌ மற்றும்‌ நந்தா கல்வி நிறுவனங்களின்‌ செயலர்‌ திரு. எஸ்‌. திருமூர்த்தி அவர்கள்‌ முன்னிலை வகித்தனர்‌. நந்தா கல்வி நிறுவனங்களின்‌ முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர்‌.எஸ்‌.ஆறுமுகம்‌ மற்றும்‌ நந்தா தொழில்நுட்ப வளாகத்தின்‌ இயக்குனர் முனைவர்‌ செந்தில்‌ ஜெயவேல்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.