ஒருங்கிணைந்த வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு துவக்க விழா
October 12, 2022
0
ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அப்பாத்தாள் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோவை , தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் பெ. ஐரின் வேதமணி, கோபி முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் வேளாண் அறிவியல் நிலையம் முனைவர் பெ.அழகேசன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோவை பேராசிரியர் செந்தில்நாதன் பேராசிரியர் முனைவர் ஆக்சில்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். துவக்க விழாவில் ஒருங்கிணைந்த வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் சி சண்முகசுந்தரம், ஆய்வாளர் செல்வி டீ கயல்விழி, செயலாளர் ராகுல் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.