EX நகரமன்ற துணைத் தலைவர், நகரச் செயலாளர், எம் ஜி ஆர் இளைஞர் அணிதலைவர் -நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
October 15, 2022
0
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும் கழக இடைக்கால பொதுச் செயலாளருமான அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு மாவட்ட கழக செயலாளரும் கழக வழிகாட்டு குழு உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான மாண்புமிகு அண்ணன் P. தங்கமணி MLA அவர்களின் ஆலோசனைப்படி கழக 51 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து குமராபாளையம் நகர, கழக, வார்டு கழக, சார்பு மன்ற நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் குமாரபாளையத்தில் 30-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகர கழக செயலாளர் K.S.M பாலசுப்பரமணி MBA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Tags