கலைஞர் சிலைக்கு அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
October 16, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் டி என் பாளையத்தில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், கோபி நகர்மன்றத் தலைவர் என் ஆர் நாகராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் டி சி மணி, தேசிய மகளிர் அணி உறுப்பினர் கீதா நடராஜன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.