கோபிசெட்டிபாளையம், அடுத்துள்ள கவுந்தபாடி செந்தாம்பாளையத்தில் அமைந்துள்ள காந்திகோவிலில் ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று முக்கிய நாளில், காந்திக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடத்தப்படும், மற்ற நாட்களில் மூன்று வேளையும் பூஜை நடக்கும்,
நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி மற்றும் கஸ்தூரிபா சிலைக்கு சிறப்பு அபிக்ஷேகம் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் கலந்து கொண்டு தீர்த்தம் எடுத்து வந்து கோவில் நடைபெற்ற அபிசேக விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் காந்திஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்வாக காந்தி மற்றும் கஸ்தூரிபா சிலைக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், நெல்லிப்பொடி, பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் ஊற்றி, மந்திரம் முழங்க அபிசேக ஆராதனை செய்யப்பட்டது,
பின், காந்தி சிலைக்கு கதர் ஆடை, கண் கண்ணாடி அணிவித்து, கையில் தேசிய கொடியுடன் விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், கஸ்தூரிபா காந்திக்கும் அபிசேக அலங்காரம் நடந்தது. பின் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது, இந்த விழாவில் கவுந்தபாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமனோர் கலந்து கொண்டு காந்தி மற்றும் கஸ்தூரிபாவை வழிபட்டு சென்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்,
உலகத்திலேயே எந்த தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு காந்திக்கு கிடைத்திருக்கிறது, உலகத்தில் 84 நாடுகளில் காந்தி சிலை இருக்கிறது, இது போன்று வேறு எந்த தலைவருக்கும் சிலைகள் வைக்கப்படவில்லை, 140 நாடுகள் காந்தியின் அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறது, காந்தியை காந்தி மகான் என்று சொன்னதே தமிழன் தான், செந்தாம்பாளையத்தில் அமைந்துள்ள காந்தி கோவிலை கோவில் என்று தமிழக அரசு அங்கீகாரம் கொடுக்கவேண்டும், சுற்றுலா பயனிகள் வந்து பார்க்கும் அளவிற்க்கு காந்திகோவில் பிரபலம் அடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காந்தி அறக்கட்டளை பொருளாளர் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே எஸ் பி செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.