பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (13.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்பாடு செய்யும் பணியை ரூ.200.71 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 12 கி.மீ நீளமுள்ள பெரும்பள்ளம் ஓடையில் இத்திட்டத்தின் கீழ் 327 எண்ணிக்கையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும் ஓடையின் பாதுகாப்பு கருதி 8.05 கி.மீ நீளத்திற்கு கம்பி வலை தடுப்புகளும் 25 இடங்களில் நீர்சரிவு அமைப்புகளும் ஓடையின் பக்கவாட்டில் 4 பூங்காக்களும் 2.4 கி.மீ நீளத்தில் இணைப்பு சாலைகளும் மற்றும் ஓடையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் 4 இடத்தில் பாலங்களும் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பான ஓடையாக பெரும்பள்ளம் ஓடை விளங்கும்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.45.32 கோடியில் 4 மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ரூ.14.14 கோடி மதிப்பீட்டில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டுதல், ரூ.15.94 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணி, ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் சிற்றுந்து நிழற்கூடம் மற்றும் கூடுதல் வாகன நிறுத்தம் கட்டும் பணி, ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை சுற்றி மேம்பாட்டுப் பணிகள் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.கே.வி ரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் மேம்பாடு செய்யும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.32.29 கோடியில் 3 பணிகளாக மேற்கொள்ள வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.15.65 கோடியில் ஆர்.கே.வி ரோட்டில் காய்கறி வளாகம் கட்டுதல், ரூ.15.60 கோடியில் ஆர்.கே.வி ரோடு தினசரி காய்கறி அங்காடிகளைச் சுற்றி மேம்பாட்டு பணிகள் செய்தல், ரூ.1.04 கோடியில் ஆர்.கே.வி ரோடு தினசரி காய்கறி அங்காடியில் சூரிய மின்தகடுகள் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஈரோடு மற்றும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வீரப்பன் சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய நான்கு பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் கழிவுநீர் குழாய்கள், ஆழ்நுழை தொட்டிகள், வீட்டு குழாய் இணைப்புகள், கழிவுநீரேற்று நிலையம், கழிவுநீர்உந்து நிலையம், கழிவுநீர் உந்து குழாய், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான பீளமேடு பகுதியில் சுமார் 18.27 ஏக்கரில், 4.80 ஏக்கர் நிலப்பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நகரும் படுக்கை உயிரி உலை முறையில் நாளொன்றுக்கு 50.55 எம்.எல்.டி கழிவுநீரினை சுத்திகரிக்கப்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாள் ஒன்றுக்கு சராசரியாக 23.00 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
தற்போது மேற்கண்ட திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.65.64 கோடி மதிப்பீட்டிலும், புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த சீர்மிகு நகரம் திட்டத்தில் ரூ.42.00 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.107.64 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் விடுபட்ட பகுதிகள் மற்றும் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளின் இரண்டு திட்டங்களில் கழிவுநீர் குழாய் பதிக்கப்பட வேண்டிய நீளம் 88.17 கி.மீ-ல் தற்பொழுது, 74.13 கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக நான்காவது சுற்றில் தேர்வு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி அபிவிருத்தி திட்டப் பகுதிகளான திண்டல் மற்றும் வில்லரசம்பட்டி பகுதிகளில் 9.03 கி.மீ நீள சாலைகள் ரூ.18.30 கோடி மதிப்பீட்டில் 7 சிப்பங்களாக ஸ்மார்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.