இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட மாவீரர்களின் நினைவுகளை போற்றும் வகையில் சக்ரா அறக்கட்டளை நாடெங்கும் தியாகப்பெருஞ்சுவர் கட்டுகிறது.
நமது மரபு மற்றும் கலாச்சாரத்தின் வேரை மீட்டெடுத்து அதை போற்றி பாதுகாத்து இளம் தலைமுறைக்கு உணர வைக்கவும், அதை செயலாக்கப்படுத்துவும் Chakra Vision India Foundation Trust தொடர்ந்து பல்வேறு சமுகப்பணிகளை மேற்கொள்கிறது. மேலும் இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் -
தேசத்திற்காக ரத்தம் சிந்தி இன்னுயிர் நீத்த தியாகிகள்மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களை இளம் தலைமுறையினர் மற்றும் யாவரும் அறிந்து கொள்ள சக்ரா அறக்கட்டளை பணிகளை மேற்கொள்கிறது.
கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை நாட்டிற்காக போராடிய தலைவர்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், இதற்காக உருவான சிந்தனைதான் தியாகப்பெருஞ்சுவராகும்.
இந்தியாவின் சரித்திர புகழ்பெற்ற 75 இடங்களில் 100 அடி உயர தேசிய கொடியுடன் தியாக பெருஞ்சுவர் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. இந்த தியாகப் பெருஞ்சுவரில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட 1040 மாவீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில்பொருத்தப்படுகிறது. இதில் வைக்கப்பட்டுள்ள QR CODE-ஐ SCAN செய்தும், சக்ரா செயலியை பதவிறக்கம் செய்தும் விடுதலை வீரர்களின் முழுமையான வரலாறுகளை படிக்கவும், காணொளியாக பார்க்கவும், ஒலி வடிவத்தில் கேட்கவும் முடியும்.
இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு முதலாவது தியாகப் பெருஞ்சுவர் பாண்டிச்சேரியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதன் பூமி பூஜையில் பாண்டிச்சேரி கவர்னர் மாண்புமிகு. திருமதி தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாண்டிச்சேரி சபாநாயகர் மாண்புமிகு திரு.ஆர்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து இந்தியாவின் மற்ற இடங்களில் தியாகச்சுவர் கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமான தாய் மண் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 75 சரித்திர புகழ்பெற்ற இடங்களில் உருவாக இருக்கும் 140 விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர் தாங்கிய தியாகப் பெருஞ்சுவரின் அஸ்திவாரத்தில் இடுவதற்கான மாபெரும் பாத யாத்திரை துவக்க விழா இன்று 2.11.2022 ஈரோட்டில் துவங்கப்பட்டது. இந்த தாய்மண் யாத்திரையில் திரைப்பட இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர்.