ஈரோட்டில் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட சலவை தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை மாநில பொருளாளர் திரு எம் முருகேசன் அவர்கள், பொது செயலாளர் திரு எம் என் சுப்பிரமணியன் ஆகியோர் நடத்திக் கொடுத்தனர். இதில் ஏகமனதாக நிர்வாகிகளை தேர்வு செய்தனர். மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு கே பி லட்சுமணன் அவர்கள் நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு ஆர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அதிகாரியாக எம் என் சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது தலைவர் வி செல்வராஜ் செயலாளர் சம்பத் (எ) கே பழனிச்சாமி பொருளாளர் எம் தனபால் மற்றும் துணை நிர்வாகிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார்கள். அவர்கள் தலைமையற்ற பின்னர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நவம்பர் மாதத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1 : மாவட்ட நிர்வாகத்தில் மேலும் புதிய கிளை சங்கங்களை உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2 : இக்கூட்டத்தில் சலவையாளர்கள் சொசைட்டி சங்க கட்டிடத்தில் இனிவரும் காலங்களில் அனைத்து சங்க நிகழ்வுகளையும் சங்க கட்டடத்திலேயே நடத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.