கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோயில் கும்பாபிசேக விழா கடந்த 6 ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கி, கணபதி பூஜை, மங்கல இசை, விக்னேஸ்வரா பூஜை,கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை,மகாலட்சுமி ஹோமம், சாந்தி திசா, பவானி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது,
தொடர்ந்து இன்று காலை முதல் யாகசாலை பூஜை, நான்காம்; கால யாக பூஜையும், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிசேகம் நடைபெற்றது,
இந்த கும்பாபிசேக விழாவில் குருமார்கள் புனித நீரை கோவிலை சுற்றி எடுத்து வந்து கோபுரத்தின் மேல் உள்ள கலசங்களுக்கு பூஜை செய்து புனித நிரை ஊற்றினார்
இதில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலசங்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்த புனித நீர் பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது, பின்னர் கோவிலில் கூடிஇருந்த பக்தர்கள் சுவாமி தரிசம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிசேகமும், கோ தரிசனமும், தச தரிசனமும்,மகாதீப ஆராதனையும்,தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெற உள்ளது,