Type Here to Get Search Results !

பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகைபெற ஆதார் பதிவு செய்யவேண்டும் - உதவி இயக்குநர் ம.கனிமொழி தெரிவித்துள்ளார்.


பிரதமரின் கிசான் திட்டத்தில் நிலம் உள்ளவிவசாயிகளுக்குவேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் செலவினங்களுக்காக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ததேதியின் அடிப்படையில் 12 தவணை வரை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அடுத்த தவணை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் e-KYC முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே விவசாயிகள் உடனடியாக விபரங்களை புதுப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள இ சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து புதுப்பித்துக் கொள்ளுமாறு அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ம.கனிமொழி அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.