தாமரை சேவை மையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக (27/11/22) இன்று பெருந்துறை தெற்கு ஒன்றியம் தோரணவாவி ஊராட்சி, திட்டமலை அருள் முருகன் கோவில் வளாகத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும்
புதிய வாக்காளர் அட்டை,
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு,
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் போன்ற அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதில்
முகாமில் இளைஞர் ஒருவர் தன்னை நமது மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தீவிர ரசிகன் என்று அறிமுகப்படுத்தி, தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு அப்பகுதியில் இளைஞரணி காரியகர்த்தாவாக பணியினை தொடங்கினார்.
முகாமின் சிறப்பு அம்சமாக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.