தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் தேசிய மன அழுத்த விழிப்புணர்வு வாரத்தை (நவம்பர் 1 - 5) முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தளிர்விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளிடையே பேசும் பொழுது,
மன அழுத்தம் என்பது நம்மை எந்நேரத்திலும் தாக்கலாம். நம்மை சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்கு தரும் பரிசு மன அழுத்தம். மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்சனை, மன உளைச்சல் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஓய்வெடுக்க முயற்சிக்கவும்.... நம்முடைய மன அழுத்த அளவைக் குறைப்பது கடினம் விஷயம் அல்ல. மன அழுத்தத்தை குறைக்க நீங்கள் பல முறைகள் பயன்படுத்தலாம், அவற்றுள்: “ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம், இசையில் தளர்வு மற்றும் போதுமான தூக்கம்“ ஆகியவற்றால் நாம் எளிமையாக மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
✒️ ஆரோக்கியமான உணவு,
✒️தினமும் உடற்பயிற்சி,
✒️தியானம்,
✒️ போதுமான தூக்கம்,
✒️ நற்சிந்தனையுடன் ஒன்று இணைத்திருக்கும் நண்பர்களுடன் செயல்படுவது,
✒️ புத்தகங்கள் வாசிப்பது.
போன்ற பழக்க வழக்கங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு அளிக்கும் என்று கூறினார்.
மேலும் இதில் மன அழுத்தம் சம்பந்தமான விழிப்புணர்வு போட்டிகள் வைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் தலைவர் சீனிவாசன், உறுப்பினர்கள், சரண்யா, செல்வராணி, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.