Type Here to Get Search Results !

அட்மா வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி ஈரோடு மாவட்ட அம்மாபேட்டை வட்டார விவசாயிகள் பங்கேற்பு


ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி கேரளா மாநிலம் திரிச்சூர் வேளாண் பல்கலைக்கழகம் மண்ணுத்தி வேளாண் அறிவியல் நிலையம், கண்ணாரா வாழை ஆராய்ச்சி நிலையம், மடக்கதாரா முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மையம் ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு கண்டுநர் பயிற்சி செயல்விளக்கம், மதிப்பு கூட்டல் முறைகள் மற்றும் பூச்சி நோய் கட்டபாடு முறைகள் குறித்து அம்மாபேட்டை வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த கண்டுநர் 5 நாட்கள் பயிற்சிக்கு அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் தலைமையில்  அம்மாபேட்டை வட்டார கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கண்டுநர் பயிற்சியில் உழவர் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் விஞ்ஞாலிகள் தொழிநுட்ப உரை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளாக அமைந்தது. 
இதில் வேளாண் தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையிட்டு தேவையான தாலிய இரகங்களை, தொழில்நுட்ப கையேடுகள் மற்றும் பூச்சி கட்டுபாடு நுண்ணுயிரிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.