கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில், நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் உத்தரவின்படி சத்தியமங்கலம் மெயின் ரோடு, கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் துப்புரவு அலுவலர் சோழராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தை வேலு ஆகியோர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோர் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர். துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பூங்கொடி, விஸ்வநாதன், பழனிச்சாமி ஆகியோருடன் ஆய்வில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த இரண்டு கடை உரிமையாளருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் இது போன்ற தொடர் ஆய்வு மேற்க் கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.