தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட த.ம.மு.க. சார்பில் அதன் ஈரோடு மாவட்ட தலைவர் ஏ. செல்வராஜ் அவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஈரோடு R.N. புதூரில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலை பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு அவர்களது விடுதியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் இந்தப் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மயில் துறையன், மகளிர் அணி தலைவி காஞ்சனா, செயலாளர் சத்யா, இளைஞர் அணி செயலாளர் சிவா பாண்டியன், மாநகரச் செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ரஞ்சித், அருள், சண்முகம், ஆர் கே எஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் ✍️ஈ. தனஞ்ஜெயன்.