ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி பகுதியை ஒட்டியுள்ள சலங்கபாளையம் கிராம பகுதியில் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இவ்விடத்தில் அரசு அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கோபி ஆர்.டி.ஓ விடம் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதாக மனு ஒன்று கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சலங்கப்பாளையம் கிராமத்தில் புல எண் 881/28.20 ஆகிய எண்களில் நிலத்திலிருந்து கிராவல் மண் அள்ளி வருகிறார்கள். இதில் மண் அல்ல அனுமதி பெற்றவர், தற்போது அனுமதிக்கப்பட்ட ஆழத்தின் அளவைவிட அளவிற்கு அதிகமாக குழி பறித்ததில், பக்கத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும் அளவிற்கு மண் அள்ளி வருகிறார்கள். எனவே தாங்கள் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.