ஈரோட்டில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் (அதிமமுக) கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள்
இக்கூட்டத்தின் தீர்மானங்களாக, கவர்னரின் சனாதன பிரச்சாரத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டம் மற்றும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் விரைவில் நடைபெறும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலைக்கு உதவிய முதல்வருக்கு பாராட்டு. நூல், பருத்தி, பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழர் வருடப்பிறப்பான பொங்கலுக்கு பரிசுத்தொகை ரூபாய் 2000 மக்களுக்கு வழங்க வேண்டும். பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கிறோம். 2021 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவது, திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி வலுப்பெற செய்வது. திரைப்படங்களில் வன்முறை, போதைப்பழக்கம், பெண்களுக்கு எதிரான காட்சிகளை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மக்கள் நல பணியாளர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசு உடனே தீர்வு காண வேண்டும். தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு வழங்க சட்டமியற்ற வேண்டும். உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கழக அவைத் தலைவர் தாஜுதீன், பொருளாளர் பூங்கா பி கே மாரி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் எம் எஸ் முத்துக்குமார், தலைமை நிலைய செயலாளர் முரளி, மாவட்டச் செயலாளர் மற்றும் உயர் மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.