ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி, செலம்பகவுண்டன் பாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று (28.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியான வீரர் பொல்லான் அவர்களின் 254-வது பிறந்த நாளையொட்டி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வி.சசிமோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி. நவமணி கந்தசாமி, துணைத்தலைவர் திருமதி.கஸ்தூரி, துணை மேயர் வெ.செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரம் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.