ஈரோடு மாவட்டம், பவானி சாலையில் உள்ள தேவி மஹாலில் இன்று (28.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தலைமையில், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் சார்பில், மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி நவமணிகந்தசாமி, துணை மேயர் வெ.செல்வராஜ், மாநகாட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் திருமதி.கஸ்தூரி, உதவி இயக்குநர்கள் பி.சரவணன் (கைத்தறி துறை), கோபிநாத் (வீரப்பன் சத்திரம் விசைத்தறி), மோகன்குமார் (அன்னை சத்யா கூட்டுறவு சங்கம்), தமிழ்செல்வன் (மேலாண்மை இயக்குநர் / தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை) உட்பட கூட்டுறவு சங்க தலைவர்கள், நெசவாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் இன்று கைத்தறி துணிகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
December 28, 2022
0