பழனிமலை முருகன் ஆலயத்தில் அர்ச்சனையும் அன்னதானமும் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
இதில் காப்பான் அறக்கட்டளை சார்பாக "பசியில்லாபழனி" என்ற திட்டத்தின் கீழ் 1045 வீடற்றவர்களுக்கும், ரோட்டோரத்தில் வாழும் நபர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் ஈரோடு மாவட்ட தலைமை அகமுடையார் முன்னேற்றசங்கத்தின் சார்பில் காளிங்கராயன் பாளையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு
அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு தலைவர் மோகன் அகமுடையார்,
மாநில இளைஞர் அணி தலைவர் சரவணன் அகமுடையார்,
மாவட்ட தலைவர் அண்ணாதுரை அகமுடையார், மாவட்ட மகளிர் அணி தலைவி கமலாசின்னசாமி,
கோவை மண்டல கொள்கை பரப்பு தலைவர் குமரசாமி மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.