பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் 17.12.2022 இன்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி. வேதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. எஸ். சௌந்தரம் அவர்கள், மாநில முன்னாள் பிரச்சார பிரிவு தலைவர் சரவணன் அவர்கள்,
மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மோகன பிரியா, ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள்- ஈஸ்வரமூர்த்தி, எஸ். எம். செந்தில், ராயல் சரவணன் ஆகியோர் மற்றும் இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவின் ஆகியோர் முன்னிலை வகிக்க பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட, ஒன்றிய, மண்டல் நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.