காவல்துறை தலைவர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத்தலைவரின் அறிவுறுத்தலின் படியும், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. V. சசிமோகன் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமையிடம் அவர்களின் தலைமையில்,
ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களில் காவல் துறை தலைமையிடம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ஆகிய அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மற்றும்
பொதுமக்கள்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு, அவ்விசாரணையில் திருப்தி ஏற்படாத மனுதாரர்களை தேர்வு செய்து, அம்மனுதாரர்கள்
மற்றும் அவர்களின் மனுவிற்குண்டான எதிர்மனுதாரர்களை சம்மந்தப்பட்ட
காவல் நிலையத்திலிருந்து ஆளிநர்களை தனித்தனியாக நியமித்து, மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கிற்கு நேரில் வரவழைத்து, இன்று 28.12.2022 ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை உட்கோட்டங்கள் ரீதியாக தனித்தனியாக நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களை உடன் வைத்து, மேற்படி மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக மறுவிசாரணை செய்யப்பட்டு, மனுக்களின் தன்மைக்கேற்ப காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய புகார்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீர்வு காணப்பட்டது.
இதர மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கோ அல்லது நீதிமன்றங்கள் மூலமோ நாடி உரிய தீர்வு பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இம்முகாமில் அனைத்து உட்கோட்ட காவல் நிலைய சரகங்களிலிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டு, 39 மனுக்களுக்கு உண்டான சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.