உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஊத்துக்குளி மத்திய ஒன்றிய திமுக சார்பாக மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
December 28, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்டம், ஊத்துக்குளி மத்திய ஒன்றிய திமுக சார்பாக, மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடன், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழகவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் தலைமையில், ஊத்துக்குளி மத்திய ஒன்றிய செயலாளர் வி. ராஜா அவர்கள் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டார். இந்நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்கள் (ராஜ்யசபா எம்.பி ) மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.