கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கான மார்பக மற்றும் கருப்பைவாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு, சிறப்பு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் கோபி உழவன் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சிறப்பு வாகனத்தில் நடத்தப்பட்டது.
Rtn.AKS K.சண்முகசுந்தரம், உடன் முன்னாள் மாவட்ட ஆளுநர் அவர்கள் கலந்து கொண்டார். நகர் மன்றத் தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் தலைமையில், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்கள் முன்னிலையில், ஆஞ்சநேயா நகர் ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் உத்தமராஜ்,
துணை ஆளுனர் கே.எம்.திவாகரன்,
உழவன் ரோட்டரி சங்க தலைவர் M.கிருஷ்ணகுமார், செயலாளர் யுதேஸ்வரன், பொருளாளர் அருண் ரொசாரியோ, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பூங்கொடி, செல்வகுமார், சக்திவேலு, தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர் வைஷ்ணவி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.