அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்ததில், ஐந்து இருசக்கர வாகனங்களில் ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தி வந்த ரேஷன் பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து இரு சக்கரவாகனங்களையும் கைப்பற்றப்பட்டு நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில், இருசக்கர வாகனங்களில் ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த ஐந்து நபர்கள் கைது ...
December 25, 2022
0
ஈரோடு சரக குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து புதுச்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் பொருட்கள் கடத்தி வருவது சம்பந்தமாக கண்காணிப்பு மேற்கொண்டனர்.