Type Here to Get Search Results !

ஈரோட்டில் சிறு தானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம்

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி சார்பாக,  உலக திணை வருடத்தை முன்னிட்டு 23.12.2022 அன்று சிறு தானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் "ஈட் ரைட் மில்லட் மேளா" ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் நடத்தப்பட்டது.
 இந்த நிகழ்வில் மாணவ மாணவியர்களுக்கு சிறு தானிய உணவுகளின் முக்கியத்துவம் தொடர்பாக சமையல் போட்டி, பேச்சு போட்டி, ஒவிய போட்டி கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக துறை சார்ந்த கண்காட்சியை சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலர் மரு.ஜெ. தங்கவிக்னேஷ்,  திரு S.V. சந்திரசேகர் ( செயலாளர், வேளாளர் கல்லுாரி நிறுவனம் ), டாக்டர் S.K ஜெயந்தி ( முதல்வர், வேளாளர் கல்லுாரி நிறுவனம் ),  R. பாலசுப்பிரமணியன் ( முதல்வர், நுகர்வோர் அமைப்பு, ஈரோடு ), திருமதி ஜெகதீஸ்வரி ( உணவு வலுவூட்டல் பயிற்சியாளர் ),  திருமதி மோகனவித்யா, திருமதி சாந்தி ( ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்), ஈடிசியா தலைவர் திரு. திருமூர்த்தி, ஈடிசியா செயலாளர் திரு. இராம்பிரகாஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு. எட்டிக்கன், திரு. மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் அவசியத்தைப்பற்றி எடுத்துக்கூறினார்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா. சபை நடப்பு ஆண்டை உலக சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழக அரசும் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க உணவு பாதுகாப்புத்துறை மூலமாக விழிப்புணர்வு முகாம் மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேற்கண்ட விழாவில் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர்  P.இந்துமதி (துறை தலைவர் வேளாளர் மகளிர் கல்லுாரி) மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு. செல்வன், திரு. அருண்குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.