அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் பெருந்துறை பணிமனை அரசு போக்குவரத்து பிரிவு தொழிலாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர், பேக், பர்ஸ் ஆகியவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு உறுப்பினருமான ஜெயக்குமார் MLA அவர்கள் வழங்கினார். இதில்
பெருந்துறை பணிமனை அரசு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் C.ஜெயக்குமார், செயலாளர் M.M.பழனிச்சாமி, பொருளாளர் R.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
பெருந்துறை பேரூர் கழக செயலாளர் V.P.கல்யாணசுந்தரம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் கழக செயலாளர் K.M.பழனிசாமி, மாவட்ட கழக பொருளாளர் கே பி எஸ் மணி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் D.சதீஷ்குமார், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் சாமிநாதன், பாசறை பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் இரட்டை இலை மணி, துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.