முன்னாள் மேயர் விசாலாட்சி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் சந்திக்கும் பொருட்டு அமமுக சார்பில் போட்டியிடுவது எனவும்,
கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர் வெற்றி பெறச் செய்வது என முடிவு எடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரம்பட்டி 4 ரோடு பகுதியில் இருந்து விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பிரச்சாரத்தை தொடங்கினர் .
இதனையொட்டி ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடு பகுதியிலிருந்து இரண்டாம் நம்பர் பேருந்து நிலையம், பெரியார் நகர், மரப்பாலம் காந்திஜி சாலை, ரயில் நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கட்சியின் சின்னம் தாங்கிய பதாகைகளையும், கட்சி கொடிகளையும் கைகளில் ஏந்தி அக்கட்சிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.