கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், நாகர்பாளையம், நல்லதம்பிநகர், கந்தசாமிநகர், நஞ்சப்பாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைத்தல், வடிகால் அமைத்தல், பேவர் பிளாக் சாலை, அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பு செய்தல், புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல், சிறுபாலம் மற்றும் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கலிங்கியம் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கு மேசை மற்றும் இருக்கைகளை வழங்கி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு அளித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் கலிங்கியம் பஞ்சாயத்து தலைவர் கோகிலா அருள் ராமச்சந்திரா, மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா பிரிணியோ, கணேஷ், மவுலீஸ்வரன், திருக்குமரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்