கோபிசெட்டிபாளையம் நகராட்சி மொடச்சூர் நகரவை மேல் நிலைப்பள்ளி, வைரவிழா மேல்நிலைப் பள்ளி மற்றும் தினசரி சந்தை பகுதியிலும் போகி பண்டிகை முன்னிட்டு, பயனற்ற பொருட்களை எரித்து சுற்றுசூழலை மாசுபடுத்தாமல் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் மற்றும் ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள், துணிகள், டையர்கள், பழைய புத்தகங்கள் போன்றவற்றை எரித்து சுற்று சுழலை மாசுபடுத்த வேண்டாம் என்றும், நமக்கு தேவையில்லாத பொருட்கள், மற்றவர்களுக்கு பயன்படும் பொருளாக இருக்கலாம். மறு சுழற்சிக்கு பயன்படக்கூடிய பொருட்களை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் பெறுவார்கள். எனவே, தேவையற்ற பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், அவற்றை நகராட்சியின் “கோபியில் புகையில்லா போகி” என்ற சிறப்பு வாகனத்திலோ அல்லது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடமோ ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சௌந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சக்தி வேலு, பழனிச்சாமி, தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர்கள் அருள், மஞ்சுநாதன், வைஷ்ணவி, காளியம்மாள், பூங்கொடி, அருண் பிரனேஷ், கிருஷ்ணன் தூய்மை பாரத திட்ட மேற்பார்வையாளர்கள் அருள் பிரசாத், சத்யா பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.