கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் டாய்லெட் கட்டிடப் பணிகளையும், 12 கடைகள் கட்டுமானப் பணிகளையும், தினசரி மார்க்கெட் வளாகம் கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
மின் நகர் பகுதியில் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும், வாரச்சந்தை பகுதியில் கடைகள் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டதையும் ஆய்வு செய்தார்.
பின்னர் ராமர் எக்ஸ்டென்சன் பகுதியில் நுண் உரக்கூட செயலாக்க மைய செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன், நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் பாலச்சந்தர், நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், நகராட்சி பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள் ராஜேஷ், பிரேமா, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் நகர் மன்ற உறுப்பினர் விஜய் கருப்பசாமி, குமார சீனிவாசன், மகேஷ்வரி, பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.