ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பூத் கமிட்டி அமைக்கும் பணியியை பார்வையிட்டு பின்பு SKC சாலை வழியே அடுத்த பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியில் வழியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹனிபா முகமது என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது ஆட்டோ மோதி வலது காலில் முறிவு ஏற்பட்டு சாலையோரம் கிடந்தார்.
இதைப் பார்த்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரிலிருந்து இறங்கி அவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் இந்த செயலை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.