இவ்விழாவில் பாரதி வித்யா பவன் பள்ளியின் தாளாளர் டாக்டர். எல். எம். இராமகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பாரதி வித்யா பவன் பள்ளியின் தலைவர் திருமதி. அருணா ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சி எஸ் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்திய திருநாட்டின் மேன்மைக்கு என்றென்றும் பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் மற்றும்
முன்னாள் மத்திய அமைச்சரும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் எஸ்.கே.எம் நிறுவனங்களின் தலைவர் திரு. எஸ்.கே. மயிலானந்தம் அவர்கள், சக்தி மசாலா நிறுவனங்களினுடைய தலைவர் திரு. துரைசாமி அவர்கள், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தாளாளர் திரு. சந்திரசேகர் அவர்கள், யூ.ஆர்.சி. நிறுவனங்களினுடைய நிர்வாக இயக்குனர் திரு. தேவராஜ் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் திரு. விடியல் சேகர் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் திரு. யுவராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பாரதி வித்யா பவன் பள்ளியின் முதல்வர் குருசடி சேவியர், பாரதி வித்யா பவன் பள்ளியின் முதல்வர் ஸ்ரீதர், பாரதி வித்யா பவன் பள்ளியின் முன்னாள் முதல்வர் திருமதி கார்த்தியாயினி, அப்பள்ளியின் தமிழ் துறை தலைவர் திருமலை அழகன், சேட்டக்கா நிறுவன தலைவர் நந்தகுமார், ஒளிரும் சிறகுகள் சீனிவாசன் ஆகியோர் மற்றும் பாரதி வித்யா பவன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு நிறைவாக மாணவிகள் வந்தே மாதரம் என்று முழங்க விழா இனிதே நிறைவுற்றது.