120 சிவலிங்கங்களுக்கும் 18 சித்தர்களுக்கும் மகாமேரு நாயகி ஸ்ரீ சக்கரத்திற்கும் அபிஷேகம்...
February 22, 2023
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குமரன் கரடு காசிபாளையம் சிவகிரி ஸ்ரீ மூன்று முக முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பாக பக்தர்கள் கொண்டாடினர் மகா சிவராத்திரி முன்னிட்டு 1089 சிவலிங்க திருமேனிகள் கொண்ட சதாசிவ சகஸ்ரலிங்கம் மற்றும் மகா அதிகார நந்தி சிலை பிரதிஷ்டை மற்றும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் 5 கால பூஜைகளில் 48 வகையான அபிஷேகங்கள் 120 சிவலிங்கங்களுக்கும் 18 சித்தர்களுக்கும் மகாமேரு நாயகி ஸ்ரீ சக்கரத்திற்கும் தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. இதில் 5000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.