காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு சம்பத் நகர் பகுதியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
பின்னர் பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காந்தி சிலை, முனிசிபல் காலனி கலைஞர் சிலை, பெரியார் நகர் மற்றும் ஈரோட்டில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள், அமைச்சர் சு. முத்துசாமி, அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் மற்றும் பல அமைச்சர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் ஈரோடு பிரச்சாரம் இறுதியாக பெரியார் நகர் பகுதியில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.